விளையாட்டு வினையானது- கழுத்து பட்டி இறுகி சிறுமி உயிரிழப்பு

554 Views

யன்னல் கதவின் பிணைச்சலில் விளையாட்டாக பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதில் பருத்தித்துறை, புலோலி- சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று(30) முற்பகல் இடம்பெற்றது.

சிறுமி தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார்.

தாயாரும் தமையனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில்கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். சுருக்கு இறுகியதால் மாணவி உயிரிழந்துள்ளார்.

கழுத்தில் பாடசாலை பட்டி இறுகிக்கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply