நேற்று (05.11.2023) தையிட்டி சட்ட விரோத விகாரையில் நடைபெறவுள்ள களியாட்ட விசேட நிகழ்வுகளை முன்னிட்டு, மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்திக்கொண்டுள்ளனர் காணி உரிமையாளர்களும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியினரும்!
தமிழர்களின் நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த விகாரையில் சிங்கள இனப்படுகொலையாளிகள் களியாட்டக் கொண்டாட்டம் செய்ய தமிழர்கள் புனிதமாகப் போற்றும் நவம்பர் மாதத்தில் வந்து குவியும்போது தமது சொந்த நிலத்திற்காகப் போராடும் தமிழர்களின் முழக்கத்தால் மன உழைச்சல் வருகிறதாம் சிங்கள வருகையாளர்க்கு எனக் கூறி போரடும் தமிரின் குரல்வளையை நசுக்கி அச்சுறுத்தி அடக்குகிறது சிறிலங்கா காவல்துறை! இதை வன்மையாகக் கண்டிப்போம்!
தமிழர்கள் வேறு விகாரைகளின் முன் போராடவில்லை! தமது நிலத்தை ஆக்கிரமித்துள்ள இந்த விகாரை ஆக்கிரமித்துள்ள தமது நிலத்தைக் கேட்டே போராடுகின்றனர்!
இது தமிழர்க்கெதிரான அடக்குமுறை மட்டுமல்ல இலங்கையில் தொடரும் தமிழின இனவழிப்பின் கூறுக்கான சான்றுமாகும்!
தமிழர்க்கு கொடிய மன உழைச்சலைத் தரும் #தையிட்டி சட்ட விரோத விகாரை தமிழின அழிப்பின் சின்னமாகவே தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது என்பதை சர்வதேச சமூகமும் உண்மையான மனசாட்சி உள்ள பௌத்த சிங்கள மக்களும் புரிந்து இதனை அகற்ற வலிமையாகக் குரல்கொடுக்க வேண்டும்!
அகிம்சையைப் போதித்த புத்தரின் பெயரால் அடாவடியாகக் கட்டப்பட்ட #தையிட்டி சட்ட விரோத விகாரை தான் தமிழ் மக்களிற்கு “மன உழைச்சலைத் தரும் ஒரு ஆக்கிரமிப்புச் சின்னம்” என இன்று உள்ளது!
இந்த தமிழரின் இரத்தக்கறை பொறிந்த கட்டடம் புத்தருக்கும் அவரது கோட்பாட்டிற்கும் மிகவும் இழுக்கானது!
வரலாற்றில் அநீதியான ஆக்கிரமிப்பின் அடையாளச் சின்னமாக இந்தக் கட்டடம் தன்னை கோர கொலை முகத்துடன் பொறித்துக் கொள்ளும் வகையில் தமிழரின் போராட்டங்கள் ஓயாமல் வரலாறாகித் தொடர வேண்டும்!
இதை முன்னின்று போராடிக் கொண்டிருக்கும் காணி உரிமையர்களான தமிழ் உறவுகளிற்கும் அவர்களுக்குப் பலமாக நிற்கும் தமிழ்த் தேச மக்கள் முன்னணியினர்க்கும் வாழ்த்துகள்!
சிவந்தினி பிரபாகரன்