வாள்களுடன் வந்த மர்ம நபர்கள்! நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் முயற்சி

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் மீது நேற்று இரவு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இந்த தாக்குதல் முயற்சியின் போது அவரது பாதுகாவலர் கையில் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா பாவற்குளம் பகுதியில் மக்கள் சந்திப்பை முடித்து வவுனியா நோக்கி வரும் நிலையில் பாவற்குளம் கிராமப் பகுதியில் ஒருவரை இறக்குவதற்காக குறித்த வாகனத்தில் கே. கே. மஸ்தான் எம்.பியும் சென்றுள்ளார்.

இதன் போது அப்பகுதியில் நின்ற சிலர் வாள்களால் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முயற்சித்துள்ளனர். இதன் போது சுதாகரித்துக் கொண்ட பாதுகாவலர்கள் தாக்குதல் முயற்சியை தடுக்க முற்பட்ட போது பாதுகாவலரின் கைப் பகுதியில் காயமேற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்க முற்பட்டவர்கள் தப்பியோடியுள்ளனர். காயமடைந்த பாதுகாவலர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.