வவுனியா பொலிஸ் நிலையத்தில் தமிழில் பெயர்ப்பலகை

வவுனியா பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகை தமிழில் மாற்றப்பட்டுள்ளது. வழமையாக இலங்கையில் பொதுவாக பொலிஸ் நிலையம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்தன.

முதன்முறையாக வவுனியா பொலிஸ் நிலையப் பெயர்ப் பலகையை வவுனியா காவல் நிலையம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற கோத்தபயா ராஜபக்ஸவின் கூற்றிற்கமையவே இந்த பெயர் மாற்றம் நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.