வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டரீதியில் சாதனை.வீடியோ இணைப்பு

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவர்கள் இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டிபோட்டு மாவட்டரீதியில் முதல் இடத்தைப் பெற்றுக் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமையைத் தேடிக்கொடுத்துள்ளனர்.

ஊயிரியல் விஞ்ஞானத்துறையில் மதனமோகன் சுலக்சனா மருக்காரம்பளைக் கிராமத்தில் வசித்துவரும் மாணவி மாவட்டரீதியில் முதலாம் இடத்தையும் அகல இலங்கை ரீதியில் 20வது இடத்தையும் பெற்றுள்ளார். தாய் தந்தையரின்றி அம்மம்மா, மற்றும் சகோதரர்களின் அரைவணைப்பில் பல சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்று சாதனை படைத்துள்ளார்.
04 1 வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டரீதியில் சாதனை.வீடியோ இணைப்பு

அதேவைளை வவுனியா தரணிக்குளம் குடியேற்றக் கிராமத்தில் விவசாயம் செய்து வாழும் குடும்பத்தைப் பின்புலமாகக் கொண்ட தங்கராசா பிரதீஸ் தரணிக்குளம் கிராமத்திலிருந்து 5 கிலோமீற்றர் துரம் துவிச்சக்கரவண்டியில் சென்று கல்விகற்கும் மாணவன.; முற்று முழுதாக பாடசாலைக் கல்வியையே நம்பி கடுமையாக கல்விகற்று வர்த்தகத்துறையில் மாவட்டரீதியில் முதல் இடத்தைப் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமைசேர்த்துள்ளார்.
02 10 வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டரீதியில் சாதனை.வீடியோ இணைப்பு

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கிராமப்புறங்களில் கல்விகற்கும் மாணவர்களே அதிகளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இதேவேளை கிராமப் புறப் பாடசாலையான வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் கடந்த காலங்களில் வறுமையில் கல்விகற்கும் அதிகளாவான கிராமப்புற மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தேர்வாகி கல்விகற்று பலதுறைகளில் சாதனைபடைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.