வவுனியா நகர்ப்பகுதிக்கு வரும் மக்கள் காவல்துறையினரால் தீவிர சோதனை

320 Views

வவுனியா நகர்ப்பகுதிக்கு வருகைதந்த மக்கள் அனைவரையும் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

DSC03248 வவுனியா நகர்ப்பகுதிக்கு வரும் மக்கள் காவல்துறையினரால் தீவிர சோதனை

இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது தேசிய அடையாள அட்டைகளை பார்வையிட்டு இன்றைய தினம் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டை இலக்கங்களை உடையவர்கள் மாத்திரமே நகர்ப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர் ஏனையோர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

DSC03261 வவுனியா நகர்ப்பகுதிக்கு வரும் மக்கள் காவல்துறையினரால் தீவிர சோதனை

இதன்போது தொழில்களுக்கு செல்வோர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தால் மாத்திரமே நகரிற்குள் அனுமதிக்கப்பட்டதோடு அத்தியாவசிய தேவை உடையோரும் அனுமதிக்கப்பட்டனர்.

DSC03233 வவுனியா நகர்ப்பகுதிக்கு வரும் மக்கள் காவல்துறையினரால் தீவிர சோதனை

இதன்போது இன்று காலை நகரிற்குள் நுளையும் பிரதான வீதிகள் சனநெரிசலாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply