வவுனியாவை உலுக்கிய மரணங்கள்!

வவுனியாவில் ஒரு வயது குழந்தையும், பெண் ஒருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா – அம்மிவைத்தான் கிராமத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு வயது பெண் குழந்தை ஒன்று கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா – கொக்குவெளி பகுதியில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளதுள்ள நிலையில், நேற்றைய தினம் அவரின் வீட்டிற்கு சென்ற அவரது உறவினர்கள் நீண்ட நேரமாகியும் யுவதியை காணாததை அடுத்து, அவரை தேடியுள்ளனர்.

இதன்போது வீட்டுக்கு அருகில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா – கொக்குவெளி பகுதியை சேர்ந்த 19 வயதான யுவதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

IMG 7652 வவுனியாவை உலுக்கிய மரணங்கள்!