வவுனியாவில் பறந்த சிவப்பு மஞ்சல் கொடி- விசாரணையில் பொலிஸார்

661 Views

வவுனியாவில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு, சிவப்பு மஞ்சள் கொடிகளை வர்த்தக நிலையம் ஒன்றின் முன்கட்டியிருந்த நிலையில்,  அது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “மாவீரர் வாரத்தினை அனுஸ்டிக்கும் முகமாக வவுனியா ஆலடி தோனிக்கல்லில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில்,  சிவப்பு மஞ்சள் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற வவுனியா பொலிஸாரினால் பறக்கவிடப்பட்ட கொடிகளினை அகற்றுமாறு தெரிவித்ததுடன், மாவீரர் தினம் அனுஸ்டிப்பு தொடர்பாக நீதிமன்றத்தின் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாதென தெரிவித்தனர்.

ஆனால்  மாவீரர் தின அனுஸ்டிப்பு அல்லது எங்களுடைய வீடுகளிலே வழிபடுவதற்கு உரிமை இருக்கின்றது என்பதை பொலிஸாருக்கு  அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி – சமூகம் மீடியா

Leave a Reply