வவுனியா மாவட்டத்தில் இவ்வருடத்தில் டிசம்பர் மாதத்திலேயே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டளவியல் ஆராட்சி திணைக்களத்தின் வவுனியா பொறுப்பதிகாரி தா. சதானந்தன் தெரிவித்தார்,
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வரும் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் 11 ஆம் திகதிவரையான மழை வீழ்ச்சியை நோக்குகின்ற போது 23.2 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளது. எனினும் இவ் வருடம் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரையான மழை வீழ்ச்சி 230.2 மில்லி மீற்றராக பதிவாகியுள்ள நிலையில் ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களிலும் பதிவாகிய மழை வீழ்ச்சியை விட இவ் வருடத்தின் டிசம்பர் மாதம் முதல் 11 நாட்கள் பதிவாகிய மழை வீழ்ச்சி 10 மடங்கால் அதிகரித்துள்ளது.
இந் நிலையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முழுவதுமான மழை வீழ்ச்சியாக 178.01 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியிருந்த நிலையில் இவ்வருடத்தின் டிசம்பர் முதல் 11 நாட்களின் மழை வீழ்ச்சியின் அளவும் அதிகமாகவுள்ளது.
அத்துடன் 2018 ஆம் ஆண்டு முழுவதுமான மழை வீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் 1550.1 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளதுடன் 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்த மழை வீழ்ச்சி 1308.6 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.