வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.

678 Views

வவுனியா மேற்கத்திய நடனக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு (22.12) மாலை 3மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் ஆசிரியர் சுஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் றோயல் ஆங்கில கல்லூரியின் இயக்குனர் திருமதி.கீதாஞ்சலி நகுலேஸ்வரன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் நடனக்கல்லூரியில் அங்கம்
வகிக்கும் மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்த மாணவர்களால் மேற்கத்திய நடன நிகழ்வுகள் கோலகலமாக இடம்பெற்றிருந்தது.

விசேடமாக சிறுவர்களின் நவநாகரிக ஆடை அலங்கார அணிவகுப்பு (Children Fashion Show) சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்ததுடன் பார்ப்பவர்களின் மனங்களையும் கவர்ந்திருந்தது.
நிகழ்வில் பெற்றோர்கள்,மாணவர்கள், நடன ஆசிரியர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.d4 வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.
d5 வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.
d1 வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.d3 வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.

Leave a Reply