வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பனின் மண்டல பூஜை

வவுனியாவில் சபரிவாசன் தீர்த்த யாத்திரைக்குழவின் மண்டல பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது.

வவுனியா உக்குளாங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற இப்பூஜை நிகழ்வின் போது ஐயப்பனுக்கு விசேட அபிசேக ஆரதனைகளும், தீபாரனைகளும் இடம்பெற்றிருந்ததுடன் ஆனந்தமிகு ஐயப்ப பயனையும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ் மண்டல பூஜை நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த குருசாமிகள், நூற்றுக்கணக்கான ஐயப்ப சாமிகள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை வருகின்ற 06.01.2019 அன்று சபரிமலைக்கு சுவாமிமார்கள் செல்ல இருப்பதனால் காலை 10.00 மணிக்கு சபரிவாசனுக்கு விசேட பூஜைகள், தீபாராதனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
DSC06663 வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பனின் மண்டல பூஜை

i2 வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பனின் மண்டல பூஜை

i3 வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பனின் மண்டல பூஜை

i4 வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பனின் மண்டல பூஜை