வவுனியாவில் இராணுவத்தினரால் தகவல் சேகரிப்பு – மக்கள் அச்சம்

556 Views

வவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வவுனியா புதிய சேலர் சின்னக் குளத்தில் கடந்த இரண்டு நாள்களாக வீடு வீடாகச் சென்ற இராணுவத்தினர் இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பதிவின்போது, வாழ்வாதார உதவிகள் வழங்கப்போகின்றோம் என இராணுவத்தினர் குடியிருப்பாளர்களிடம் தெரிவித்ததாகவும், வீட்டில் வசிப்பவர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம், வயது, தொலைபேசி இலக்கம் என்பன கோரப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர். தற்போதைய சூழலில் இராணுவத்தினரால் இவ்வாறு தகவல் சேகரிக்கப்படுகின்றமை தொடர்பில் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply