வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்களுக்கு நீதி வேண்டி போராட்டம்

770 Views

சர்வதேச சிறுவர் தினம் இன்றாகும், சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்று காலை சிறீலங்காவின் வடபகுதியில் சிறீலங்கா அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்களுக்கு நீதி வேண்டி காணமல் போனோர் அலுவலகம் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மூன்று அம்ச கோரிக்கை முன்வைத்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் மாவட்ட காணாமல் போனோர் அலுவலகம் (OMP) முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டம் காலை 11:30 மணிக்கு இடம் பெறுகிறது.

1:காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம்.

2:காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை

3:அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன் வைத்தே கவன ஈர்ப்பு போராட்டம் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது .

Leave a Reply