412 Views
வறுமையின் பிடியில் உள்ள மக்களை மீட்பதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கமைய, வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிப்பதற்கு தாங்கள் இன்றே தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவர் கூறினார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், நேற்று (04) நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.