வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்.

தமிழர்களின் கடல்சார் தொன்மையை வெளிகொணர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்.

சில நூற்றாண்டுகளாக தமிழர்கள் மறந்துவிட்ட ஒரு முக்கியமான துறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு, பணிகளை தொடர இளைஞர்களை முடுக்கி விட்டு இறுதிப் பயணத்தை தொடங்கிவிட்டார் ஐயா ஒரிசா பாலு அவர்கள்!!

எத்தனையோ பயணங்கள் செய்தவர்… எல்லை இல்லா பெரும் பயணம் செல்கிறார்… விட்டுச் சென்ற பணிகள் தொடர்வதே தமிழர்கள் செய்யும் நன்றிக்கடன்!!

கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கடலியல் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு இன்று மாலை உயிரிழந்தார். ஒரிசா பாலு மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆமைகள் வழித்தடம் குறித்தும் தமிழர்களின் கடல் பயணம் குறித்தும் ஆய்வு செய்து வந்தவர் ஒரிசா பாலு… கடந்த ஆண்டு முதல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஒரிசா பாலு இன்று மாலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 60. வாய்ப்புற்று நோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட ஒரிசா பாலு ஆழ்வார் பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கேரளாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

குமரி கண்டம் தொடர்பான ஆய்வையும் ஒரிசா பாலு எழுதிக் கொண்டு இருந்தார். ஒரிசா பாலுவின் உயிரிழப்பு இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் சார்ந்த பல தொல்லியல் நூல்களையும் ஒரிசா பாலு எழுதியிருக்கிறார். ஒரிசா பாலுவின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பலரும் ஒரிசா பாலு உயிரிழந்ததையடுத்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உலகில் எங்கெல்லாம் தமிழன் வாழ்ந்தான், தமிழ் வாழ்கின்றது, புராதன தமிழனின் கடல்வழி வர்த்தகம் என்பது பற்றி அணுதினமும் ஆய்வு செய்து வெளிக்கொண்டுவந்திருந்த பெருவிருட்சம் இயற்கையின் சதிக்கு இரையானது.

உலகில் பெரும்பாலான நாடுகளில் தமிழ்ச்சொற்கள் பயண்பாட்டிலுள்ளதை ஆதாரத்துடன் நிறுவிய பேராசான்.

அமைதியாக உறங்குங்கள்
உங்கள் உழைப்பின் பயன் ஒருபோதும் உறங்காது தமிழ் வாழும் வரை

வேணுகோபால் மாதவன்