471 Views
மல்லாவி ஆலங்குளத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டது. ஆலங்குளம் கிராம மக்களின் ஏற்பாட்டில் பொதுக்காணி ஒன்றில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
இரண்டு மாவீரர்களின் சகோதரரான அருமைத்துரை தவராசா அவர்களினால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மாவீரர்களின் பெற்றோரும் மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதனிடையே, ஈச்சம்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பெருமளவன மக்கள் கலந்து கொண்டனர்.