வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றார்

372 Views

வட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

முன்னதாக, வட மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த 18 மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தின்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வட மாகாண ஆளுநராக பதவி ஏற்கவுள்ளதாக கூறப்பட்டது. எனினும், எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தலேயே இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என, தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன, கடந்த 23ஆம் திகதி காலை கூறியிருந்தார். இந்த நிலையிலேயே, வட மாகாண ஆளுநராக, திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

Leave a Reply