வடமராட்சி கிழக்கில் காணாமற் போன வயோதிப தாயார்

யாழ். வடமராட்சி கிழக்கு தாழையடியைச் சேர்ந்த வயோதிபத் தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் செல்லும் போது காணாமற் போயுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம்(07) தாளையடியிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக பேருந்தில் புறப்பட்ட சிவனேசன் நேசமலர்(67) என்பவர் இன்னும் வீடு திரும்பவில்லை என அறிவித்துள்ள குடும்பத்தினர், அவர் குறித்த தகவல்களை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளனர். அவர் மறதி உள்ளவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

0769161853, 0776031544 ஆகிய தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு அவர் பற்றிய தகவல்களை அறிவிக்கும்படி அவரின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

Leave a Reply