வடக்கில் உள்ள தமிழ் மக்களின் கடலில் அத்துமீறி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 27 மீனவர்களையும் அவர்களின் 5 படகுகளையும் விடுவிக்க உதவுமாறு தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்ராலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமது படகுகளையும், கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் விடுவிக்குமாறு அவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 120 படகுகள் இலங்கையில் உள்ளன.
ஈழத்தமிழ் மக்களின் கடலுக்குள் அத்துமீறி மீன்களை பிடிக்கும் இந்திய மீனவர்களால் தமிழ் மக்கள் தமது தொழில்களை இழந்து நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.