வடக்கு கிழக்கில் யாழ்மாவட்டத்தில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள்

இலங்கையில் H.I.V எயிட்ஸ் நோயாளிகள் மிகக்குறைவான அளவில் உள்ள மாவட்டமாக கிளிநொச்சியும் அதிகளவு உள்ள மாவட்டமாக கொழும்பும் இனம்காணப்பட்டுள்ளது..

வடக்கு கிழக்கில் H.I.V பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக #யாழ்ப்பாணம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இலங்கையில் H.I.V தாக்கத்திற்கு ஆளானோர் வரிசையில் யாழ்ப்பாணம் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

யாழ்ப்பாணம் வடக்கின் H.I.V தலைநகரமாகவும். கொழும்பு தெற்கின் H.I.V தலைநகரமாகவும் இருக்கிறது. நாகரீக வளர்ச்சியில் H.I.V யும் வளர்ந்திருக்கிறது.

இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலுமே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக தெரியவந்திருப்பதானது வேதனைக்குறியது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் H.I.V தாக்கத்திற்கு உள்ளானோர்
(100,000 பேரில் சதவிகிதம்)

1) கொழும்பு – 35.1%
2) கம்பஹா – 18.8%
3) புத்தளம் – 14.1
4) காலி – 10.2%
5) யாழ்ப்பாணம் – 10.1%
6) களுத்துறை – 10.1%
7) வவுனியா – 9.3%
8) கண்டி – 8.4
9) முல்லைத்தீவு – 8.4%
10) குருநாகல் – 7.6%
11) பொலநறுவை – 7.5%
12) கேகால – 7.4%
13) மாத்தளை – 7.3%
14) திருகோணமலை – 7.2%
15) மன்னார் – 6.6%
16) இரத்தினபுரி – 5.7%
17) பதுளை – 5.4%
18) அம்பாந்தோட்டை – 5.2%
19) அனுராதபுரம் – 5.0%
20) மட்டக்களப்பு – 4.4%
21) அம்பாறை – 4.3%
22) மாத்தரை – 4.3%
23) நுவரெலியா – 4.1%
24) மொனராகல – 3.1%
25) கிளிநொச்சி – 2.5%