Prabhakaran Is Our Hero என்னும் வாசகம் ருவிற்றரில் இந்திய அளவில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கடந்த 26ஆம் திகதி உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. சமூகவலைத் தளங்களில் பிரபாகரன் குறித்த செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
Prabhakaran Is Our Hero என்ற வாசகத்தை உருவாக்கி, பிரபாகரன் பயங்கரவாதி அல்ல, தமிழர்களின் தலைவர் என்பதை உலகிற்கு சொல்வோம் என்பதற்காக அதிகம் பகிரப்பட்டுள்ளது.
இந்த வாசகம் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. இதில் பிரபாகரனின் பேட்டிகள், பிரபாகரன் வாழ்க்கையை விவரிக்கும் வீடியோக்கள், விடுதலைப் புலிகளின் படங்கள் ஆகியவை பதவிடப்பட்டிருந்தன.