ரணில் – உலகத்தமிழர் பேரவை சந்திப்பு

உலகத்தமிழர் பேரவைக்கும் இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கும் இடையில் சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழi(7) நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கையின் முக்கியமான பௌத்த மதபீடங்களின் அரசியல் துறவிகளும் கலந்துகொண்டாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றல், நீதியை நிலைநாட்டுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கூட்டாக அறிவித்தல் விடுக்கப்பட்டதாக இலங்கை அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

புலம்பெயர் அமைப்புக்களில் ஒரு பிரிவினரும், தமிழ் நாடாளும்னற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் புதுடில்லி சென்று இந்திய அதிகாரிகளை சந்தித்துவரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.