ரணிலின் வரிக் கொள்கை எட்டமுடியாதது – பிற்ச் நிறுவனம்

இந்த வாரம் இலங்கை அரசு சமர்பித்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ள 47 விகித வரி அறிவீடு என்பது எதிர்வரும் வருடத்தில் எட்டமுடியாத ஒன்று என அனைத்துலக நிதி முகாமைத்துவ தரப்படுத்தும் நிறுவனமான பிற்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை (15) தெரிவித்துள்ளது.

இந்த கொள்கை அனைத்துலக நாணயநிதியத்தின் நிதி வழங்கலையும் பாதிக்கலாம். எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது. அதாவது ஒன்றுக்கு ஒன்று முரனான வரவுசெலவுத்திட்டமாகவே இது உள்ளது.

எனவே எதிர்வரும் வருடம் பொருளாதார மீட்சியை அது எதிர்பார்க்க முடியாது. வரவுசெலவுத்திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறை 7.1 விகிதமாக கணிக்கப்பட்டாலும் அது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக்களே உள்ளன. அது 9.1 ஆக இருக்கலாம் என அரசு எதிர்பார்க்கின்றது.

எதிர்வரும் வருடம் அரசின் செலவீனம் 22 விகிதமாக இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. அது 20 விகிதமாக இருக்கும் என அனைத்துலக நாணயநிதியம் கணிப்பிட்டிருந்தது. இந்த வருடம் அது 19 விகிதமாக இருந்தது. இலங்கையில் பொருட்களின் விலைகள் அடுத்த வருடம் மீண்டும் அதிகரிக்கலாம் என அது மேலும் தெரிவித்துள்ளது.