மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ மீண்டும் தனது கடமைகளைத் தொடர்வதற்காக கடற்படையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
கோல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேக்(CSN) தொலைக்காட்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இவர் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இடைநிறுத்தப்பட்ட யோஷித ராஜபக்ஸவை மீண்டும் கடற்படையில் இணைத்துக் கொள்ளும் அனுமதிக் கடிதத்தை நேற்றைய தினம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கையொப்பமிட்டிருந்தார். இதனையடுத்தே இவர் பணியில் இணைக்கப்பட்டார்.
மீண்டும் இணைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ லெப்டினன்ட் தரத்திலேயே இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.