யேர்மனிலிருந்து வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞர்களைக் காப்பாற்ற போராடுவோம் – போராட்ட ஒழுங்கமைப்பாளர்கள்

452 Views

யேர்மனியிலிருந்து தமிழ் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட இருப்பதைத் தடுக்கும் வகையில் IMRV – பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின் அனுசரணையுடன் Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளனர்.

போராட்டம் நாளை திங்கட்கிழமையிலிருந்து புதன்கிழமை வரை, பகல் இரவு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும். பகுதிநேர ஒத்துழைப்பாக அனைத்துத்தமிழ் மக்களும் பங்குகொள்ள வேண்டுகிறோம். இது ஓர் முக்கியமான முன்னெடுப்பு. சட்ட அளவிலும் பாராளுமன்ற அளவிலும் திரு.விராஜ் மென்டிஸ் தலைமையில் இப்போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டம் தொடர்பான விபரங்கள்:
காலம்: 07.06 – 09.06.2020
முகவரி :Oststadtpark, Lindenstr.89
75175 Pforzheim

Leave a Reply