யாழ்.மாவட்ட ரீதியில் மாபெரும் தாச்சி சுற்றுப்போட்டி

அழிந்து வரும் தமிழர்களின் மரபுவழி பாரம்பரிய விளையாட்டை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்குடன் யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியுடன் அவர்களின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்கள் கூட்டணியின் விளையாட்டுத்துறை மாபெரும் தாச்சி சுற்றுப்போட்டி ஒன்றினை யாழ்.மாவட்ட ரீதியில் நடாத்தவுள்ளது.

தமிழர்களின் பாரம்ரியத்தினை எடுத்தியம்பும் இச் சுற்றுப்போட்டிக்கு யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் இலண்டன் வாழ் ஈழத்தமிழருமாகிய குருபரன் (குரு) அவர்கள் நிதி அனுசரணை வழங்குகின்றார்.

இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் அணிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று யாழ்.மாவட்ட தாச்சி சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. யாழ்.மாவட்ட ரீதியில் நடைபெறும் இவ் மாபெரும் தாச்சி சுற்றுப்போட்டியில் 30 அணிகள் பங்குபற்றுகின்றன.

எதிர்வரும் 02.10.2023 திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு தாவடி காளி அம்மன் விளையாட்டு மைதானத்தில் இச் சுற்றுப்போட்டி ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறும்.