யாழ். மானிப்பாயில் விசேட அதிரடிப்படையினர் தேடுதல்

852 Views

மானிப்பாயில் தனு ரொக் என்ற இளைஞரின் வீட்டை விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் இணைந்து பெருமெடுப்பிலான ஓர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

மானிப்பாய் லோட்டஸ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றை இன்று(06) அதிகாலை 5.45 மணியளவில், பேருந்து ஒன்றில் வந்த 25இற்கும் மேற்பட்ட அதிரடிப்படையினரும், பொலிசாரும் சுற்றிவளைத்து அங்கிருந்தவர்களை சோதனைக்குட்படுத்தினர்.

சோதனை மேற்கொண்ட வேளை அந்த வீட்டின் குடும்பத் தலைவர் அங்கிருக்கவில்லை. தாயும் மகன், மகள் ஆகியோரே அங்கிருந்ததாக அறிய முடிகின்றது.  வீட்டிலிருந்த பெண்கள் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

வீட்டினை சோதனைக்குட்படுத்திய அதிரடிப்படையினர், வீட்டு வளவிலிருந்து 3 துருப்பிடித்த வாள்களை கைப்பற்றினர்.

இதனையடுத்து வீட்டிலிருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த இளைஞர் மீது வன்மமான முறையில் பொலிசாரால் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே இவர் மீது 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பல வழக்குகளில் இருந்து இந்த இளைஞர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

சட்ட முரணான வகையில் இளைஞர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக இதற்கு முன்னரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply