யாழ். புத்துாரில் தொல்பொருள் திணைக்களத்தால் அகழ்வு நடவடிக்கை – மக்கள் எதிர்ப்பு

509 Views

யாழ் வலி கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகளை தொடங்கியிருப்பதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் அகழ்வாரய்ச்சி பணி இடம்பெறும் போது தெரிவிக்கப்பட்டதை அடுத்து பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

பிழம்பு's Content - Page 13 - கருத்துக்களம்

இந்நிலையில் இன்று மீண்டும் குறித்த பகுதிக்கு வந்த தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்த நிலையில் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர், பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து தொல்லியல் திணைக்களத்தினர் தவிசாளருக்கு எதிராக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் தவிசாளரை விசாரணைக்கு வருமாறு  காவல்துறையினர்அழைத்துள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில்  குழப்பமான நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply