யாழ் பல்கலையில் மாவீரர் தின நிகழ்வு ஏற்பாடுகள் நிறைவு

யாழ்.பல்கலைகழகவளாகத்தில் உள்ள மாவீரார் நினைவு தூபியில் மாவீரார் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் பல்கலைக்கழக மாணவார்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவீரார் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மற்றும் புலம்பெயார் தேசங்களில் உணர்புபூர்வமாக அனுட்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் யாழ்.பல்கலைகழக வளாகத்திலும் மாவீரார் நாள் நினைவேந்தல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை யாழ்.பல்கலைகழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி க.கந்தசாமி யாழ்.பல்கலைகழக வளாகத்தில் 26, 27ம் திகதிகளில் எந்தவொரு நிகழ்வுகளும் நடாத்தகூடாது என தடை விதித்துள்ளார்.

எனினும் யாழ்.பல்கலைகழக மாணவர்களால் மாவீர் தினத்திற்கான ஒழுங்குகள் முன்னதாகவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதன்படி நண்பகல் 12 மணியளவில் மாவீர் நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து 1000 மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளதுடன், மாலை 6மணி 5 நிமிடத்திற்கு மாவீர்களுக்கான ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி இடம்பெறவுள்ளது.

Leave a Reply