யாழ்.பல்கலைக் கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது

384 Views

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்தமை அங்கு நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply