யாழ். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் பேராசிரியர்

150 Views

யாழ். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் பேராசிரியர் சம்பத் அமரதுங்க நியமிக்கப்பட்டதையடுத்து உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் 5பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர்.

தற்போதைய உயிரியல் இரசாயனத்துறை முதுநிலை விரிவுரையாளரும், முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தருமான பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவியை முன்னர் பேராசிரியர் குமாரவடிவேல் வகித்திருந்தார்.

Leave a Reply