யாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது

511 Views

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் தீபம் ஏற்றிய மாணவன் ஒருவரை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

யாழப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் ம. தர்ஷிகன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார் மாணவர்களை அச்சுறுத்தினர்.

இந்த நிலையில் ஒரு மாணவன் தடைகளை மீறி தீபம் ஏற்றிய போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாணவர்கள் செல்லமுடியாதவாறு பல்கலை வாயில்கள் பூட்டப்பட்டுள்ளன.

Leave a Reply