யாழ் நெடுந்தீவில் வெளிநாட்டிலிருந்து சென்றவர்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை

23 64438ce47f197 யாழ் நெடுந்தீவில் வெளிநாட்டிலிருந்து சென்றவர்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நெடுந்தீவு இறங்கு துறை மற்றம் கடற்படை முகாம் என்பவற்றிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்கொலை இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. இனந்தெரியாத சிலர் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்ட 5 பேரில் இருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கடற்படையினரும்  காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.