555 Views
யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் திரவ படலம் தென்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் திரவப் படலத்தின் மாதிரிகள் யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவால் இன்று மாலை எடுத்துக்கப்பட்டது.
மாதிரிகள் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
ஆய்வு செய்த பின்னரே அது தொடர்பில் முடிவுக்கு வரமுடியும் என்று இடர் முகாமைத்துவப் பிரிவின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் சூரியகுமார் தெரிவித்தார்.