யாழ் வந்த சந்தோஸ்நாராயணன் திலீபனை வணங்கினார்

யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை(24) வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மாலை வேளை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள விருந்தினர் விடுதியில் சந்தித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்பதும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணன் பிரம்மாண்ட இசை நிகழ்வொன்றை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செப்டெம்பர் 30ஆம் திகதி சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், திகதியில் மாற்றம் செய்யப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 4 மணிக்கு சந்தோஷ் நாராயணன் பங்கேற்கும் ‘யாழ் கானம்’ இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவாலயத்தில் நினைவுவணக்கம் செலுத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Santhosh Narayanan 2023 யாழ் வந்த சந்தோஸ்நாராயணன் திலீபனை வணங்கினார்

 

Santhosh Marayanan Thileepan 2023 யாழ் வந்த சந்தோஸ்நாராயணன் திலீபனை வணங்கினார்