யாழில் 5 பேருக்கு கொரோனா உறுதி

189 Views

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொண்ட பரிசோதனையில் 5 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூவர் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்

இன்று வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் 162 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் சோதனைக்கு உட்பட்டவர்களில்
ஐந்து பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

ஒருவர் கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர். ஒருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்.

குருநகரைச் சேர்ந்த இருவர் பேலியகொடை மீன் சந்தைக்கு வியாபாரம் சம்பந்தமாக போய் வந்தவர்கள். ஒருவர் மன்னார் பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருப்பவர் என மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply