யாழில் புத்தசிலை மீது தாக்குதலாம்;பெருமளவில் படைக்குவிப்பு

யாழ்.நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் , வீதியோரமாக வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு மோட்டாட சைக்கிளில் வந்த இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படையினரது முழுமையான கண்காணிப்பு வளையத்தினுள் அமைந்துள்ள விகாரை நுழைவாயிலில் உள்ள கண்ணாடி கூடு உடைக்கப்பட்டமை சந்தேகத்தை பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.யாழ்ப்பாணத்தில் படையினரின் பிரசன்னத்தை நியாயப்படுத்தவும் தேர்தல் ஆதாயங்களை பெற்றுக்கொள்ளவும் இதுபோன்ற நடவடிக்கைகள் இன்னும் இடமபெறலாம் என அவதானிகள் கருதுகின்றனர்.