யாழில் ஆலய கேணிக்குள் சடலமாக கிடந்த சிறுவன்!

472 Views

தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தக் கேணியில் மூழ்கிய நிலையில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலையே இந்த சம்பவம் தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். ஆலயத்துக்கு வந்த பக்தர்களே கேணியில் மூழ்கிய நிலையில் சடலம் இருப்பதைக் கண்டு அது தொடர்பில் வல்வெட்டித்துறை போலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply