யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட ரீதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் விளையாட்டுத்துறை நடத்தும் மாபெரும் தாச்சி சுற்றுப்போட்டி கடந்த திங்கட்கிழமை (02.10.2023) இரவு 7 மணிக்கு தாவடி காளி அம்மன் விளையாயட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.
இவ் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் , யாழ் மாவட்ட தாச்சி சங்க நிர்வாகிகள், தமிழ் மக்கள் கூட்டணியின் விளையாட்டுத்துறை பொறுப்பாளரும் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய மகேந்திரன் மயூரன் யாழ்.மாவட்ட தாச்சி சங்க தலைவர் எ.வி.ஜெயவிந்தன், செயலாளர் சீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர்களின் பாரம்ரியத்தினை எடுத்தியம்பும் இச் சுற்றுப்போட்டிக்கு யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் இலண்டன் வாழ் ஈழத்தமிழருமாகிய குருபரன் (குரு) அவர்கள் நிதி அனுசரணை வழங்குகின்றார்.
ஆரம்ப போட்டியில் நவாலி தென்றல் விளையாட்டுக் கழகம் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் விளையாட்டுக் கழகம் ஆகிய கழகங்கள் பங்குபற்றியிருந்தன. போட்டியில் நவாலி தென்றல் விiளாயட்டுக் கழகம் 4 புள்ளிகளையும் சுதுமலை புவனேஸ்ரி அம்பாள் விளையாட்டுக் கழகம் 3 புள்ளிகளையும் பெற்றதமைக்கு அமைய நவாலி தென்றல் விiளாட்டுக் கழகம் வெற்றியினை தனதாக்கிக் கொண்டது.
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு இச் சுற்றுபோட்டிக்கான போட்டிகள் ஆரம்பமாகும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்