யாழில் அரங்கேறும் கூலிக் கொலைகள்

யாழ்.குடாநாட்டில் பாதாள உலக கொலைகள் வேகமாக அரங்கேறிவருகிறது.

இன்று அதிகாலை வலிகாமம் கிழக்கின் புத்தூர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் புத்தூர் வீரவாணி பகுதியை சேர்ந்த துரைராஜா சந்திரகோபால் (வயது-52 ) என்பவரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

இக்கொலை தனிப்பட்ட பகை காரணமாக  நடைபெற்றதாக  சொல்லப்படுகின்ற போதும்,  திட்டமிட்ட பாதாள உலக கும்பல் மூலம் அரங்கேற்றப்பட்ட கொலையாக பார்க்கப்படுகின்றது.