யானை தாக்குதலால் அச்சுறுத்தளுக்கு உள்ளாகும் மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக பல இன்னல்களை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர் இது தொடர்ந்தும் இருந்தே வருகிறது யானை மனிதன் முரண்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்பட்டாலும் யானை தாக்குதலினால் பல மனித உயிர்கள் பலியாகின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதியில் உள்ள ஆயிலியடி ,வட்டமடு ,செம்பி மோட்டை பகுதியானது விவசாயப் பூமியாகும் இப் பகுதியில் 67 வயதான விவசாயி ஒருவர் 2024.01.21 அன்று மாலை காட்டு யானையின் தாக்குதலால் உயிர் இழந்தார்.

இப்படிமாக யானை தாக்குதல் காரணமாக மனித உயிர்கள் பலியாகின்றன.

elephant attack யானை தாக்குதலால் அச்சுறுத்தளுக்கு உள்ளாகும் மக்கள் - ஹஸ்பர் ஏ ஹலீம்இப் பகுதியில் முறையான யானை வேலி அமைக்கப்படாமையும் விவசாயிகள் பல துன்பங்களை அனுபவித்து வருவதாக கூறுகின்றனர். வனஜீவராசிகள் திணைக்களம் ஊடான கண்காணிப்பில் உள்ள யானை வேலிகள் முறையானதாக அமைக்கப்படுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களது வயல் நிலங்கள்,பயிரினங்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் இரவு நேரங்களில் பாதுகாப்புக்காக பல அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

சில வேலைகளில் யானையின் அட்டகாசத்தால் பல பயன் தரும் மரங்கள் ,நெற் செய்கை போன்றன அழிக்கப்பட்டு துவம்சம் செய்யப்படுகின்றன.

குறித்த ஆயிலியடி பகுயியில் மாத்திரம் 2015தொடக்கம் 2024 தற்போது வரை 03 உயிர்கள் யானையின் தாக்குதலினால் காவு கொள்ளப்பட்டுள்ளன. இப் பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள் நெற் செய்கை பண்ணப்படும் போதும் அதனை பராமரித்து அறுவடை செய்யும் வரை அச்ச சூழ் நிலையில் யானைகளுக்கு பயந்து காலத்தை வயல் நிலங்களில் இரவு வேலைகளில் கழித்து வருகின்றனர்.

உரிய அரசாங்க திணைக்களங்கள் யானை வேலிகளை பராமரிக்கவும் பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு சீறான தரமான யானை வேலிகளை அமைக்கவும் முன்வர வேண்டும் இதற்காக பொறுப்புடன் அவர்கள் செயற்பட வேண்டும் என்பதுடன் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க சிறப்பு பயிற்சி திட்டங்களையும் முறையான வேலைத் திட்டங்களையும் ஆரம்பிக்க வேண்டும். காட்டு யானைகள் பல இடங்களில் குப்பை மேட்டுகளை தேடி வருவதும் பனை மரங்கள் உள்ள பகுதிகளை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது .

இருந்த போதிலும் யானை மனிதன் மோதல் என்ற நிலை காணப்பட்டாலும் பல யானைகள் பல காரணங்களால் உயிரிழக்கின்றன. மின்சான வேலியில் சிக்குதல், பட்டாசு வெடி வெடித்து உயிரிழத்தல் போன்ற காரணங்கள் உட்பட இயற்கை மூலமான உயிரிழப்புக்களும் இடம் பெறுகின்றன. வனஜீவராசிகள் திணைக்களத்தின் அறிக்கையின் படி 2022ம் ஆண்டில் 439 யானைகள் உயிரிழந்துள்ளன என்றும் 2023 ஜனவரி தொடக்கம் டிசம்பர் 01வரை 449 யானைகள் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் யானை தாக்குதல் தொடர்பாக ஆயிலியடி பகுதியின் இளைஞன் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

elephant attack2 யானை தாக்குதலால் அச்சுறுத்தளுக்கு உள்ளாகும் மக்கள் - ஹஸ்பர் ஏ ஹலீம்“யானை தாக்கம் இங்கு அதிகரித்து உயிர் சேதங்களும் நிலவி வருகின்றது பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாயமே செய்து வருகின்றோம். யானை வேலி இருக்கின்ற போதும் சீறாக இல்லை வருடா வருடா யானை தாக்குதல் காரணமாக பல உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன விவசாயத்தை தவிர எங்களுக்கு வேறு தொழில் தெரியாது அரசாங்கம் மூலமான தீர்வு இல்லை உயிர் சேதம் இடம் பெற்றே வருகிறது யானை வேலிகளை பராமரித்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.

இப்படியாக யானை தாக்குதல் காரணமாக உயிரை பணயம் வைத்து விவசாய நிலத்தை பாதுகாக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அப்பாவி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆயிலியடி கிராம மக்கள் அன்றாட ஜீவனோபாயமாக விவசாயம் கூலித் தொழில் மூலமாக வாழ்வாதாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

“விவசாயம் செய்து வருகிறோம் யானை வேலி சீரில்லை இதனை சீராக்கி செய்து தாருங்கள் இதனை யாரும் தேடுவாரற்ற நிலையில் உள்ளது இதனை முறையாக சீறாக பாதுகாத்து யானை தாக்குதலில் இருந்து பாதுகாத்து தாருங்கள்” என இப் பகுதியின் விவசாயி ஒருவர் தனது ஆதங்கத்தை அன்றைய தினம் யானை தாக்குதலினால் உயிரிழந்தவரின் சம்பவ இடத்தில் வைத்து தெரிவித்தார்.

elephant யானை தாக்குதலால் அச்சுறுத்தளுக்கு உள்ளாகும் மக்கள் - ஹஸ்பர் ஏ ஹலீம்மனித யானை மோதல் என்பது பல காலா காலமாக இடம் பெறுவதுண்டு திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த மட்டில் பல இடங்கள் விவசாய செய்கை கொண்ட இயற்கை எழில் கொண்ட இடமாகவும் பல இயற்கை வளங்களை கொண்ட பூமியாக காணப்படுகிறது. திருகோணமலையின் கன்னியா குப்பை மேட்டுப் பகுதி,தம்பலகாமம் ஜெயபுர குப்பை மேட்டுப் பகுதி, கிண்ணியா சின்னத்தோட்டம் குப்பை மேட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் இவ் யானைகள் அதிகமாக நடமாடுகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் மூலமாக கொட்டப்படும் கழிவுகளை தேடி யானைகள் படை எடுக்கின்றன. அருகாமையில் உள்ள மக்கள் இக் காட்டு யானையினால் அச்ச சூழ் நிலையில் தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

மக்களை பாதுகாக்க குப்பை மேட்டு கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்யக் கூடிய மீள் சுழற்சி மூலமாக உற்பத்திகளை அதிகரிக்க பல திட்டங்கள் உள்ள போதிலும் முறையான திட்டம் ஊடாக நடை முறைப்படுத்துவதாக தெரியவில்லை.

சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் சூழல் மாசடையாத வண்ணம் கழிவுகளை முகாமை செய்ய வேண்டும் சில வேலைகளில் கழிவுகள் மூலமாக சூழல் மாசடைவு ஏற்பட்டு மக்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

எனவே தான் யானை தாக்குதலை குறைக்கவும் முறையான யானை வேலிகளை அமைக்கவும் உரியவர்கள் முன்வர வேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த எதிர்பார்பாகும்.