மொரவெவவில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் மொரவெவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி கிராமத்தில் சிவில் அமைப்புக்களினால் நேற்று (09) சனிக்கிழமை காலை மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.

morewewa HRC மொரவெவவில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு

பன்மதவாச்சி விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துரைகளும், சிறுவர்களுடைய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு பன்குளம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக இக் கிராமத்தில் வாழும் மக்களுக்கான குடியிருப்பு மற்றும் விவசாய காணிகள் வழங்கப்படவில்லை எனவும், மக்களினால் காலாகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணிகள் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காட்டு யானை உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வில் சிவில் செயற்பாட்டாளர்கள், கிராமமக்கள் மற்றும் AHRC நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவன சிவில் செயற்பாட்டாளர்களினால் டிசம்பர் 04ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.