மைத்திரிக்கு தகவல் சொன்ன மர்மநபரை தேடுகிறது சி.ஐ.டி.

maithri மைத்திரிக்கு தகவல் சொன்ன மர்மநபரை தேடுகிறது சி.ஐ.டி.ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர் யாரென்ற தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்த நபரை கண்டறிவதற்கான விசாரணைகளை சி.ஐ.டி. ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே இந்தத் தகவல் தமக்குத் தெரிய வந்ததாக மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டிக்கு அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தாராம். இதையடுத்து, அந்த நிகழ்வு நடந்த இடத்தின் சி.சி.ரீ.வி. பதிவுகளை சி.ஐ.டியினர் பெற்று சோதித்து வரு கின்றனர் என்று தெரிய வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர் யார் என்பது எனக்கு தெரியும். தனது உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தால் நீதிமன்றில் இரகசியமாக சாட்சியம் அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்று அண்மையில் கண்டியில் வைத்து கூறியிருந்தார்.

இது தொடர்பில், சி.ஐ.டியினர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.