மூதூர் பிரதேச செயலகம் மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரனையின் உதவியுடன் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுதிறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்று (04) பேர்ல் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட எம்.ஏ.எல். ரத்தீபா கால்நடை வைத்திய அதிகாரி ஆரோக்கியமான உணவு முறைகள் பற்றியும் அதனை எவ்வாறு செய்வது தொடர்பான செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது மற்றும் மாற்றுதிறனாளி பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கு ஏற்படும் சவால்களுக்கு உளவள ஆலோசனை வழங்கியதுடன் கால் நடை அபிவிருத்தி போதனா ஆசிரியர் பேரின்ப சிவம் என்பவரால் கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பாகவும் மிகவும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அங்கவீனமுற்ற தேசிய செயலகத்திலிருந்து சமூக சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட உளவள துணை உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.