மூடப்பட்டது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம்

429 Views

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டதுடன் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

IMG 6738 மூடப்பட்டது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம்

இதனை தொடர்ந்து அவர் கரடியனாறு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தங்கியிருந்து சிகிச்சைபெற்ற விடுதி மூடப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மற்றும் ஊழியாகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம் மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

IMG 6711 மூடப்பட்டது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை மட்டக்களப்பு வெல்லாவெளி பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 10 நபர்களுக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறு இனங்காணப்பட்டவர்களை வீடுகளில் வெல்லாவெளி பொது சுகாதார பரிசோதகர்களினால் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply