இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் வரை சமராடி வீரகாவியமான மாவீரர்களில் இரண்டாவது கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட 42 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இறுதி நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் மாவீரர்களாக உரிமைகோர முடியாது போன மாவீரர்களே இப்போது அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான புனித கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
போராளிகள் கட்டமைப்பு அமைப்பினரின் ஏற்பாட்டில் பெருமை உணர்வெழுச்சியுடன் சுவிற்சர்லாந்தில் நடந்த இந்த நிகழ்வில் நூற்றுக் கணக்கான மக்களும் முன்னாள் போராளிகளும் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் புலிக்கொடியை முன்னாள் போராளி நாயகன் ஏற்றினார். ஈகைச்சுடரை முன்னாள் போராளி செபமாலை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவீரர்களுக்கான மலரஞ்சலியை தேசிய செயற்பாட்டானர் சந்துரு ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவீரர்களுடன் இறுதிப் போரில் கொல்லப்பட்ட பொது மக்களும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களும் நினைவுகூரப்பட்டனர்.
இந்நிகழ்வில் வீரத்தின் வித்துக்கள் பாகம் – 1 இசைத்தட்டும் வெளியீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவீரர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றன.