முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6 | குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா
குரல்வளையைக் கடித்துக் குதறுதம்மா!
மயிலாடிக் களித்தவன்னி மாகுண்டால் எரிந்ததம்மா
மண்மேடாய்த் தமிழீழம் ஆனதம்மா!
மைம்மா முகில்தடவிச் சிரித்தமுல்லை மாடமெல்லாம்
மகிந்தப்பேய் கால்குதித்து ஓடுதம்மா!
செய்யபுகழ்க் கதிர்விரிந்த செந்தமிழ்மா ஈழமெல்லாம்
சேர்ந்த இருள் கார்பரவிக் கவிந்ததம்மா!