முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5 | இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை
எரித்துக் கரித்துப் பொரித்தாரே!
மந்திகள் கைப்பூ மாலைகள் என்னஎம்
மக்கள் சிதைந்து மரித்தாரே!
அந்திச் செவ் வானமாய் நந்திப் பெருங்கடல்
அருந்தமிழ்க் குருதியில் ஆனதுவே!
சிந்திய கண்ணீர் ஆறுகள் பெருகிச்
செங்கடல் நந்தியில் போயினவே!