முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 | கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார் கழுத்துகள் நெரித்தார் சிரித்தார்! பண்கள் மிழற்றும் பைந்தமிழ் ஈழத்தில் பாவிகள் ஏன்எமைப் பிரித்தார்! பெண்கள் தொட்டார் பிள்ளைகள் சுட்டார் பெரும்பழி செய்து நட்டார்! மண்ணில் அறம்புகல் மாந்தரெல் லாரும் மறந்தெமை ஏன்கை விட்டார்!