முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 3 | கட்டுமரம் ஏறிவந்து கரையொதுங்கி….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 3

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

கட்டுமரம் ஏறிவந்து கரையொதுங்கி நின்றவுன்னைக் கைபிடித்து வைத்ததற்கோ பாவி சுட்டகுண்டு பேய்நெருப்புச் சூறையிலே சுற்றமெல்லாம் சொந்தமின்றி விட்டதடா ஆவி! நட்டநடுக் காட்டினிலே நாய்நரிகள் ஊளையிலே நாற்புறமும் கிடக்குதடா சொந்தம்! கெட்டழிந்து விட்டோமே கிள்ளியெறி யாமையினால் கீழ்மையனே சிங்களவ புத்தா!